எனது எழுத்தின் மையச்சரடாக எதைக் கைக்கொண்டிருக்கிறேன் என்று கேட்டால் Inclusiveness என்ற வார்த்தையைச்சொல்வேன். எந்த தனித்தன்மைக்கும் பொது அடையாளமாக அல்லது அரசியல் நிபந்தனையாக அச்சொல்லே இருக்க முடியும்
அதுதான் ஜனநாயகத்தின் மீதான விழைவாக, இயற்கையின் மீதான காதலாக, தனிமனிதத் தன்னிலைகளின் மீதான பரிவாகத் தோற்றம் கொள்கிறது. கோபத்துக்கும் வெறுப்புக்குமான வேறுபாட்டை, விமர்சனத்துக்கும் காழ்ப்புக்குமான வேறுபாட்டை, சமரசத்துக்கும் பிழைப்புவாதத்துக்குமான வேறுபாட்டை நீங்கள் இந்த சொற்களுக்கு இடையே இனங்கான முடியும். நம் அதிகாரச் சூழலில் நிலை பெற்றிருக்கும் சொற்களில் இருந்து அவை விலகி நிற்பதாக நான் கற்பனை செய்துகொள்ளும் உத்வேகத்தை அவையே எனக்கு வழங்குகின்றன
- ஜி.கார்ல் மார்க்ஸ்