எல்லா வெற்றி பெற்றவர்களின் பின்னால் உழைப்பு இருக்கிறது.அதிர்ஷ்டம் இருக்கிறது.பணம் இருக்கிறது.இன்னும் நிறைய இருக்கிறது.ஆனால் அனைத்தையும் தாண்டி நேர்மை இருந்தால் தான் வெற்றி நிச்சயம்.என்னுடன் இத்தனை ஆண்டுகள் ஒரு நண்பனாக பயணிக்கிற வெங்கி,இன்றும் திரைத்துறையில் ஒரு கமர்ஷியல் இயக்குனராக பயணிப்பதற்கு காரணம் அவரிடம் இருக்கும் நேர்மை!அந்த நேர்மை அவர் எழுதிய இந்த “விக்னேஷ்வரனாகிய நான்” புத்தகம் முழுக்க இருக்கிறது.எளிமையாகவும்,ஆழமாகவும் அதே சமயம் கவனித்து...நம் நினைவில் நிறுத்திக் கொள்ளவும் நிறைய விஷயங்களை சொல்லி இருக்கிறார். -இயக்குனர் சங்கர்
ஒரு நாணல் காற்றின் போக்கில் வளைந்து கொடுத்தபடியே வளரவும் செய்யும்.இன்று ஒரு புத்திசாலி அப்படி இருக்க வேண்டும்.சென்னையில் அதுவும் இந்த பெருநகரத்தில் வாழ எத்தனை மொழி பேசவேண்டும் எத்தனை விதமான வேஷம் போட வேண்டும் ஒரு அஷ்டவதானி போல தான் தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனர் நடக்க வேண்டும் என்பதற்கு இந்த புத்தகம் உதவி இயக்குனருக்கு ஒரு வழிகாட்டி உரை.ஒரு வெற்றியாளனின் ஒப்புதல் வாக்குமூலம். இந்த புத்தகத்தில் உண்மையை எந்த ஒப்பனையும் இன்றி வெங்கடேஷ் சார் எழுதியுள்ளார். -இயக்குநர் G.வசந்தபாலன்