கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தபிறகு பெங்களூரு எஸ்.ஜே.பி.கல்லூரியில் திரைப்பட ஒளிப்பதிவைக் கற்றார்.
அசையும் படம் என்ற தமிழின் முதல் ஒளிப்பதிவு நூலை எழுதியவர்.பிறகு ஒளிப்பதிவுத் தொழில்நுட்பத்தை பற்றி பிக்சல் (தமிழ் மற்றும் ஆங்கிலம்),ஒளி ஓவியம்,திசை ஒளி என்ற ஐந்து புத்தகங்களும் ஒளிப்படக்கலை பற்றி க்ளிக் என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
இவர் ஒளிப்பதிவு செய்த திரைப்படங்கள் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றுள்ளன.ஃபிலிம் மூலம் இவர் ஒளிப்பதிவு செய்த ‘ஆயிஷா’ 2001 ஆம் ஆண்டு லண்டன் திரைப்பட விழாவில் சிறந்த குறும்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.இவர் டிஜிட்டலில் ஒளிப்பதிவு செய்த ‘என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்’ என்ற குறும்படம் 59 வது பெர்லின் உலகத் திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் பங்கேற்றது.
நாடக ஒளியமைப்பு,ஆவணப்படங்கள்,திரைப்படங்கள்,ஒளிப்பதிவுக் கலையைக் கற்பித்தல் என பன்முகத்தன்மை கொண்டவர்.
தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் இணையதளத்தில் (www.thesica.in) சினிமா தொழில்நுட்பக் கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார்.