ச.தமிழ்ச்செல்வனின் மனிதர்கள் வாழ்சின் கடைக்கோடியிலிருந்து எழுபவர்கள்.வாழ்வின் நெடுஞ்சாலைகளில் அவர்கள் பயணிக்க முடிவதில்லை.சிண்டுசிடுக்கான நகர வாழ்வின் அனுபவங்களும் இல்லை.
கிராமியத்தின் வெள்ளந்தி மனங்களைச் சமூக வாழ்வு தன் ஆக்ரோஷத்தால் வெல்லப் பார்க்கிறது;எனினும் அவர்கள் பின்வாங்குவதில்லை;தொடர்ந்து போராடி வெல்கிறார்கள்.இந்த வெற்றியை அவர்களுக்குத் தரும் வல்லமை எது?ஆந்த ஊற்றுக்கண் எங்கிருந்து பொங்குகிறது?
மிகமிக அபூர்வமாக வாய்க்கக் கிடைக்கிற தருணங்களின் ஒற்றை இழையிலிருந்து முகிழ்க்கும் இந்த வாசனையின் பெயர் என்னவோ,அதுதான் இப்படைப்புகளின் ஆதாரம்.