வரலாற்றின் இருண்ட பக்கங்களில் புதையுண்டு போன நிகழ்கலைப் படைப்பாளிகள் பலர். அவர்களில் சிலர் மீதாவது வெளிச்சம் பாய்ச்சும் முயற்சியை இந்த நூல் சாத்தியமாக்கி இருக்கிறது. இவர்கள் மேற்தட்டு அங்கீகாரமின்றி விளிம்புநிலைக் கலைஞர்களுக்காக இயங்கியவர்கள். தத்தம் காலங்களில் சமூகக் கொடுமைகளுக்கு எதிராகக் கலகக்குரல் எழுப்பியவர்கள். உரிய வெகுமதி ஏதுமின்றி புறக்கனிக்கப்பட்டவர்கள். இந்த நூல் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் நிகழ்கலையின் பல்வேறு துறைகளிலும் இயங்கி வரும் 24 படைப்பாளிகளை அறிமுகப்படுத்தி அடையாளம் காட்டுகிறது. அவர்களைப் போன்ற கலைஞர்கள் உரிய முறையில் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனு தேவையை வலியுறுத்துகிறது. நிகழ்கலைகள் அதிகம் ஆவணப்படுத்தப்படாத தமிழ்ச்சூழலில் இது ஒருமுன்னோடி நூல். படைப்புத்திறன் மிகுந்த படைப்பாளிகள் குறித்த இந்தப் பதிவு செறிவானது மட்டுமல்ல, பண்பாடு முக்கியதுவம் வாய்ந்ததும்கூட.