கல்வியறிவும், அனுபவ அறிவும் பெற்ற அறிவிற்சிறந்தோரை சான்றோர் என்பர். வானொலியில் அன்றாடம் சான்றோர் சிந்தனை என்ற நிகழ்ச்சியில், புத்துணர்வு தரும் கருத்துகளை எடுத்துரைத்தார். அதனை ஒன்றிணைத்து அழியாச் செல்வமான புத்தகம் வழி தந்துள்ள அருட்சகோ. முனைவர் அ. அருள்சீலி அவர்களின் பணி பாராட்டுதலுக்குரியது இன்றைய வாழ்க்கை தரும் அனுபவங்கள் அபூர்வமானதாக சிக்கலானதாக நேற்றைய மனிதன் அறிந்திராத ஒன்றாக இருக்கிறது. இதனை தெளிவுப்படுத்த மக்களுக்குச் சென்றடைந்தால் மட்டுமே சமூகம் முன்னேற்றம் அடைய முடியும் என்ற உயரிய நோக்கத்தோடும், கருத்துகளை வரலாற்றுச் சான்றோடு அருட்சகோதரி தந்துள்ளார் என்றால் மிகையானது