வாழ்வாங்கு வாழும் மனிதனுடைய அன்றாஅட நிகழ்வுகளையும் கடந்தகால நிகழ்ச்சிகளையும், இயற்கையின் இயல்புகளையும் அதன் சிறப்புஜ்களையும் சீற்றங்களையும் வினாவிடை வழியாக விளக்கிகாட்டி தெளிவான கருத்தருவியை தங்கு தடையின்றி எல்லாரும் பயன்பெறும் வண்ணம் கையாண்டுள்ளார்.
“வினா-விடை” உத்தியைப் பயன்படுத்தி தன் எழுத்தாற்றலை வெளிக்கொணரும் இந்நூலில் வாழ்க்கைத் தத்துவங்கள் விளக்கப்படுகின்றன. வேதனை போக்கி சாதனை செய்திடும் போதனைகள் தூவப்பட்டுள்ளன. ஆன்றோர் கருத்துகள் கையாளப்பட்டுள்ளன. விழிப்புணர்ச்சி எண்ணங்கள் விதைக்கப்பட்டுள்ளன.