அசட்டுத்தனம் இல்லாத ஆனந்த உயர்வை எழுத்தின்மூலம் நாகூர் ரூமி விதைக்கிறார்.ஆனந்த ஆன்ம முழுமைக்கும் இவர் பேனா உழுது உணவளிக்கிறது. ‘வரலாறு படைத்த வரலாறு’ மகத்துவமிக்க மனிதகுல மனோரஞ்சிதங்களை நெஞ்சில் பதியம் போடுகிறது.உலகையே வலம் வந்த பிள்ளையாரின் உணர்வை இந்த ஒற்றிப் புத்தக வாசிப்பு தருகிறதே!ஒட்டுமொத்த நாலும் மனுடத்தின்மீது மகத்தான மதிப்பையும் மரியாதையையும் தோற்றுவிக்கிறது.அல்லாப் புத்தகங்களிலும் சில பக்கங்கள் இருப்பது வழக்கம்.ஆனால் இவர் புத்தகத்தில் மட்டும் ஒவ்வொரு பக்கத்திலும் சில பல புத்தகங்கள் அடங்கி இருக்கின்றன. -சுகி சிவம்