வாங்க சிரிச்சிட்டுப் போகலாம் :
மனதை அழுத்திக் கொண்டிருக்கும்பாரம் குறைந்து மனது லேசாக வேண்டுமெனில், செலவில்லாத, எளிதான ஓர் அணுகுமுறை சிரிப்பது.
மனம் விட்டுச் சிரிக்கும்போது, தசைநார்கள் நெகிழ்வடைகின்றன, சிரிப்பு தலை முதல் கால்வரை உடல் முழுவதும் ஊடுருவி இறுகிப் போயுள்ள தசைகளை மிருதுவாக்குகிறது.
சிரிப்புச் சிகிச்சையின் மூலம் எபின் ஃபிரைன், கார்டிசால் போன்ற மன அழுத்தம் தரக்கூடிய ஹார்மோன்களின் சுரப்பைக் குறைக்கலாம். மனம் ஒன்றி தியானம் செய்வது போன்ற வலிமையான ஒரு வகையாக இந்தச் சிரிப்பைச் சொல்லலாம்.
தியானத்தைப் பொறுத்தவரை நினைவுகளையும் மனதையும் நான் கட்டுப்படுத்தி , புறச்சூழலிலிருந்து முற்றிலும் விடுபட்டு நமது மனதை ஒருமுகப்படுத்தி நிலை நிறுத்த வேண்டும் சிர்க்கும்போது நம்முடைய எந்தவித சுய முயற்சியுமின்றி, நமது உணர்வுகள் இயற்கையாகவே ஒருங்கிணைந்து நமக்கு சந்தோஷம், சமாதானம் மற்றும் நிம்மதியைத் தருகிறது, இது இயற்கை நமக்குத் தந்த வெகுமதி.
சிரிக்கும்போது நோய்த்தடுப்பு சக்தி அதிகரிக்கிறது என்பது வியப்பிறகுரிய சக்தி அதிகரிக்கிறது என்பது வியப்பிற்குரிய ஓர் உண்மை பல தொற்று நோய்கள், அலர்ஜி ஏன் புற்றுநோயிலிருந்துகூட இது நம்மைக் காப்பாற்றுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். எதிர்மறை உணர்வுகளான பதற்றம், சோர்வு, கோபம் இவை அனைத்தும் நம் உடலின் நோய்த் தடுப்பு மண்டலத்தைப் பாதித்து, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து விடும் என்று மனநல நோய்த் தடுப்பாளர்கள் நடத்திய ஆய்வில் நிரூபணமாகி உள்ளது. அமெரிக்க மருத்துவர் லீஎஸ்.பெர்க் என்பவர், “சிரிப்பு நமது உடலின் பாதுகாவலனான வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்வதுடன், ஆண்டி – பாடிக்களின் அளவையும் கூட்டுகிறது” என்கிறார்.