வான்கா
வின்சன்ட் வான் கா பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் புகழ்பெற்ற ஐரோப்பிய ஓவியர். உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் அவரைப் போல வண்ணமயமாக தீட்டியவர்கள்
அப்போது வேறு யாருமில்லை. தொழிற்புரட்சிக்குப் பின் பித்து பிடித்தலைந்த பாமர ஐரோப்பியனின் மனசாட்சி அவர். அவர் வரைந்தது பத்தே ஆண்டுகள் தான்.
முப்பத்து ஏழு வயதில் அவர் தற்கொலை செய்துகொண்டார். அதற்குள் கலை உலகின் சோக சக்ரவர்த்தியாக அவர் உலகை வென்றார்.