அதி யதார்த்தமான துயரில் தொடங்கும் இந்நாவல்,பின்னர் இந்திய ஆன்மிக மனங்களுக்குள் உறைந்து கிடக்கும் தீவினைப் பயன்கள்,முற்பிறவிச் சிந்தனைகள்,பிறப்பறுத்தல் போன்றவற்றின் நிகழ்ச்சிப் பிரதியாக மாறுகிறது.
மாயை மறைய/வெளிப்படும் அப்பொருள்/
மாயை மறைய/மறைய வல்லார்கட்குக்/
காயமும் இல்லை,கருத்தில்லை தானே
என்ற திருமூலரின் தேடலை சதாசிவம்,ராஜா,ராணி,லீலா,கோபு என்கிற பாத்திரங்களின் வாழ்க்கைக்குள் தேடிய முயற்சி ‘ஊயிரின் யாத்திரை’.