கோவை மாவட்டம் வதம்பச்சேரியில் பிறந்து,மேல்நிலைக் கல்வியை தமிழ் வழியில் பயின்றவர்.நாமக்கல் கால்நடைமருத்துவக் கல்லூரியில் பயின்றபோது,கல்லூரி கால்பந்து அணிக்கு தலைமையேற்று,பல வெற்றிகளைப் பெற்றுத் தந்தவர்.அதிக மதிப்பெண்கள் பெற்றமைக்காக கல்லூரி இறுதியாண்டில் ஐந்து தங்கப் பதக்கங்களையும் வென்றவர்.
கால்நடை மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ள இவர்,2003ஆம் ஆண்டில் ஐஏஎஸ் தேர்வில் தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுத்து,தமிழக மாணவர்களிலேயே முதலிடத்தில் வெற்றி பெற்ற பெருமைக்குரியவர்.தர்மபுரி,ஈரோடு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவராய் இருந்தவர்.ஈரோடு மாவட்டத்தில் ஆட்சியராக இருந்தபோது,இவர் ஆற்றிய பணிகளைப் பாராட்டி, ‘நற்பணி விருதினை’ சமீபத்தில் செஞ்சிலுவைச் சங்கம் வழங்கியுள்ளது.
தமிழ்வழி படிக்கும் மாணவர்களும்,பெரியவர்களும் அறிவியலின் உண்மையான சுவையை அனுபவிக்க வேண்டும் என்கிற எண்ணத்திற்குச் சொந்தகாரர்.கூர்ந்து பார்த்து வியக்கும் உள்ளம் பெறுவாய்...’என்று இளைய தலைமுறையைத் தொடர்ந்து கேட்க விழைபவர்.