உருப்படு! :
பிறந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம் என்பது பிறவிப்பலன் அல்ல. எதையாவது சாதித்து அதன் பலனை, நம் சந்ததியினரின் வளமான வாழ்வுக்கு அடிப்படையாக விட்டுச்செல்வதுதான் நல்ல மனிதனுக்கு அழகு.
சாதிக்க விரும்புவர்களுக்கான நம்பிக்கை நல்முத்து இந்தநூல். கருணை, தெளிந்த சிந்தனை, நேர்மை மற்றும் அயராத உழைப்புடனும், பொறாமை, கர்வம் மற்றும் உடலில் உள்ள குறைபாடுகளைச் சாதகமாக மாற்றிக் கொண்டு, வெற்றி நமதே என்ற முனைப்போடும் செயல் பட வேண்டும்.