ஆளுமைகளின் நினைவுகளே நம்மை வழி நடத்துகின்றன. புதிய வழியை நோக்கிய நம்முடைய பயணத்திற்கு, அவர்களின் காலடிச்சுவடுகளே துணை,
வானத்திலிருந்து இறங்கக்கூடிய வசனங்களைப் பெற்று, சமூகத்திற்கு வழங்கும் - பேரை நாம் பெறவில்லை. எனவேதான், வாழ்விலிருந்து சிலவற்றைத் தேடிக்கொள்கிறோம்.
நம்மையும் நம் வாழ்வையும் நமக்கு முன்னே இருந்த ஆளுமைகளே வடிவமைக்கிறார்கள். ஊக்கமும் நம்பிக்கையும் அல்லாமல் ஒருநாளையேனும் நம்மால் கடக்க முடிவதில்லை,
அத்தகைய ஊக்கத்தையும் நம்பிக்கையையும் பிறருடைய , வாழ்விலிருந்து பெற்றுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். நமக்குக் கிடைத்துள்ள சொற்ப அனுபவங்கள்கூட அவர்களால் கிடைத்தவையே.
யார் மாதிரி நாம் இருக்கிறோம்? அல்லது எவர் மாதிரி நாம் இருக்க விரும்புகிறோம்? என்பதை ஆராய்ந்து பார்ப்பதில்தான் வாழ்வைப் புரிந்துகொள்ள முடியும். முன் மாதிரிகளால் உருவாக்கப்பட்ட நாமும், ஒருகட்டத்தில் அம்மாதிரி ஆக விரும்புகிறோம்.
- யுகபாரதி