திருமதி. கிருத்திகா இந்தப் பயண நாவல் மூலமாக எழுத்துலக பயணத்தைத் தொடங்குகிறார். நாவல் எழுதி முடித்து அச்சில் வருவதற்கு இடைப்பட்ட இரண்டு மாதத்தில் முதல் முயற்சியாக இவர் எழுதிய சிறு கதைகளும், கதை விமர்சனங்களும் சிங்கப்பூரில் நடந்த போட்டிகளில் பரிசுகளைத் தட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மிகவும் பிரபலமாகி வரும் ‘க்ரூஸ்’ எனப்படும் உல்லாசக் கப்பல் பயணத்தை மேற்கொள்ளும் விருந்தினர்களுடைய உணர்வுகளை மெல்லிய கதையில் இழைத்து சுவாரசியமான நாவலாகப் படைத்துள்ளார் கிருத்திகா.
“சுவாரசியமில்லாத என் வாழ்க்கையில், கப்பலில் சில நாட்கள் விடுமுறையைக் கழிப்பதால் என்ன மாற்றம் வரும்?” – என்ற கேள்வியுடன் இந்தியாவிலிருந்து புறப்படும் பூரணி என்ன உணர்ந்திருப்பார்?
“நல்ல சேவை கிடைக்கும் என்றால், நான் என் வாழ்நாள் முழுவதும் இப்படிப்பட்ட இடத்தில் வாழத் தயார்” - மினி, சிங்கப்பூர்.
சர்வதேச உணவு, நீச்சல் குளங்கள், நடனக் கச்சேரிகள், மினி கோல்ப், கடல் என கலக்கும் கதாபாத்திரங்கள் உங்களையும் உற்சாக வெள்ளத்தில் மூழ்கடிப்பார்களா?
புத்தகத்தைப் படித்து இவர்களுடன் நீங்களும் பயணம் செய்து பாருங்களேன்!