நமது உடலில் உள்ள சில உறுப்புகளை மட்டுமே அன்றாடம் இயக்கிக் கொண்டுள்ளோம்.பல உறுப்புகள் முறையான இடத்தில் இல்லாமல் இருக்கின்றன.அவ்வாறு அல்லாமல் அனைத்து உறுப்புகளையும் முறையாக,சீராக இயக்குவதற்காகவே உடற்பயிற்சி செய்கிறோம்.இவ்வாறு உடலை பராமரிப்பதன் மூலம் ஆரோக்கியமான உடலையும்,நோயற்ற வாழ்வையும் பெற முடியும்.
மனித வாழ்க்கையை நெறிமுறைப்படுத்தி வாழ்க்கையில் பயன் ஏற்படுத்த உதவுவது யோகக்கலை.சித்தர்கள் யோகக்கலை வல்லுநர்களாக இருந்திருக்கிறார்கள்.
உறுதியாகவும் சுகமாகவும் இருப்பது ஆசனம்.பிராணாயாமம்,தாரணை,தியானம்,சமாதி ஆகிய எல்லாமே ஆசனத்தை அடிப்படையாகக் கொண்டவைதான்.
எண்பத்து நான்கு இலட்சம் ஜீவராசிகளுக்கும் ஒவ்வோர் உயிருக்கும் ஓர் ஆசனமாக எண்பத்து நான்கு இலட்சம் ஆசனங்கள் இருந்ததாகக் கூறுகிறார்கள் சித்தர்கள்.