நெஞ்சுரமிக்க போரளியின் அர்ப்பணிப்பும் போர்க்குணமும் மன உறுதியும் சற்றும் குலையாமல் மரண தண்டனையை எதிர்கொண்ட அவல மனநிலையை அதனதன் பாடுகளிலேயே பதிவாக்கியிருக்கும் வரலாற்று ஆவணம் இந்நூல்.
மரணதண்டனைக்கு எதிராக வலுவான குரல்கள் எழும்பத் தொடங்கியிருக்கும் சூழலில் மரணதண்டனையின் கொடூர முகத்தை அங்குலம் அங்குலமாக விரித்துக் காட்டுகிறது இந்நூல்.மரண தண்டனை அறிவிக்கப்பட்டதிலிருந்து தூக்கு மேடைக்குச் செல்வது வரையிலான அவஸ்தையை அதன் பாடுகளோடு நூலாசிரியர் உருக்கம் பெருக சொல்லியிருக்கும் பக்கங்களை எந்தவொரு வாசகரும் எளிதில் கடந்துவிட இயலாது.