திருவள்ளுவர் திரும்பி வந்தால் அறம் பாடுவார்
அறம், பொருள், இன்பம் என்னும் முப்பகுப்பு உடையதாய் திருக்குறள் அமைந்துள்ளது. எனினும் ‘உயிர் நாடி’ அறமே. வள்ளுவரின் பொருளும் அறநெறி பொருளே; இன்பமும் அறநெறி இன்பமே! அறநெறிதவறிய பொருளப் பொருளாகவோ, அறநெறி தவறிய இன்பத்தை இன்பமாகவோ கருதாக கருத்திடையவர் வள்ளுவர். ஆகவே, முப்பால நூலாகிய திருக்குறள் ‘அறநூல்’ என்பதே வாய்மையாகும்.