சமகால தமிழக மற்றும் இந்திய அரசியல் பாதையைத் தீர்மானித்த சக்திகளுள் மிக முக்கியமானது. திராவிட இயக்கம்.
திமுக ஆட்சியின் தாக்கத்தைத் தமிழகம் உணர்வதற்கு முன்னால், அண்ணா மறைந்துவிட, கலைஞர் மு.கருணாநிதியின் பொறுப்பில் ஆட்சியும்
கட்சியும் வந்து சேர்ந்தது. பெரியார், அண்ணா இருவரிடமும் பணியாற்றிய அனுபவம் அவருக்குக் கைகொடுத்தது.
திமுகவில் இருந்து விலகி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கியபோது, திராவிட இயக்கம் மேலும் பல பிளவுகளுக்குத் தயரானது. பிறகு, எமர்ஜென்சி புயலில்
சிக்கி, மீண்டு எழுவதற்குள் தேர்தல் தோல்வி. அடுத்த பத்தாண்டுகளுக்கு, எம்.ஜி.ஆரின் சவாலை அவர் சந்திக்க வேண்டியிருந்தது.
திமுகவின் முடவுரையை பலர் எழுத ஆரம்பித்துவிட்ட சமயத்தில், கலைஞர், கட்சியை ஒருங்கினைத்தார். தமிழகம் அதுவரை அறிந்திராத, வலிமையான
எதிர்க்கட்சி இலக்கணத்தை வகுத்து கட்சிக்கு உயிருட்டினார்.