பெரும்பாலானோருக்கு, தாங்கள் குறி வைக்கும் இலக்குகள் வெறும் கனவாகவே இருந்துவிடும்போது, ஒரு சிலரால் மட்டும் தாங்கள்
தேர்ந்தெடுக்கும் இலக்குகள் அனைத்தையும் எப்படி அடைந்துவிட முடிகிறது? இதற்கான விடை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்கிறார்
பிரையன் டிரேசி. ஒருசில வெற்றியாளர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த அந்த ரகசியங்களை இப்புத்தகத்தில் அவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
இருபதாண்டுகால அனுபவத்தையும் நாற்பதாண்டுகால ஆராய்ச்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இப்புத்தகம், இலக்குகளை
நிர்ணாயிக்கவும் அவற்றை அடையவும் தேவையான, நடைமுறைக்கு உகந்த, நிரூபணமான உத்திகளைத் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது.
இப்புத்தகத்தினால் இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ள்னர்.
எந்தவிதமான இலக்குகளாக இருந்தாலும் சரி, அவற்றை அடையத் தேவையான 12 அம்சத் திட்டம் ஒன்றை பிரையன் டிரேசி இந்நூலில்
முன்வைக்கிறார். ஒருவருடைய வலிமைகளை எவ்வாறு அடையாளம் காண்பது, சுயமதிப்பையும் சுயதுணிச்சலையும் எவ்வாறு வளர்த்தெடுப்பது,
எதிர்ப்படும் தடைகற்களை எவ்வாறு தகர்த்தெறிவது, சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது போன்றவற்றை அவர் இப்புத்தகத்தில் அறிவியற்பூர்வமான
கண்ணோட்டத்துடன் அணுகுகிறார்.
இலக்குகள் குறித்து இனி நீங்கள் வேறு ஒரு புத்தகத்தைத் தேடி அலைய வேண்டியதில்லை.