உலகளாவிய தமிழர் மத்தியில் எளிய மொழியில் கனமான விஷயங்கள் சொல்லி வரும் உளவியல் ஆளுமை இவர்.உளவியல் மட்டுமின்றி மனித வளம்,கல்வி,திரைப்படம்,இலக்கியம்,சமூகப்பணி என பல்வேறு தளங்களில் இயங்கிவருபவர்.
மேற்கத்திய மன சிகிச்சை முதல் கிழக்கத்திய தத்துவம் வரை வசீகரமான உதாரணங்களால் கடைசி வாசகனும் புரிந்து கொள்ளும் அளவிற்கு சுவையாக எடுத்துரைக்கும் கதை சொல்லி.
”தி இந்து”தமிழில் வந்தது முதல் அதிகமான தொடர்களை எழுதியவர்.இவரது தொடர்கள்”நம் மக்கள் நம் சொத்து”மற்றும் “வேலையைக் காதலி”புத்தங்களாய் வெளி வந்து பெரு வெற்றி பெற்றூள்ளன.
தன்னை உணர்ந்து,தன் வாழ்வை செழுமைப்படுத்திக் கொள்ள நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இவரின் எழுத்துகள் பயன்படும்.