தெக்கத்தி ஆத்மாக்கள் :
இந்த குணசித்திரங்களில் அச்சு அசலாக வருபவர்கள் கிராமியக் கலைஞர்கள். சங்கூதும் பண்டாரம், சலவை செய்பவர், மண் பாண்டம் வனைவோர், முடி திருத்துவோர் போன்ற இவர்கள் தொழிலாளிகள். தொழிலைக் கலையாகக் செய்கிறவர்கள்.
விதவிதமான ஓவியங்கள் வைரைவது தூரிகையென்றால், விதவிதமான சிகையலங்காரத்தை எழுப்புகிற கத்தரிக்கோலுக்குப் பெயரென்ன?
காலங்கள் தோறும் மாறுபட்ட ராகங்களை மீட்டிவருவது வீனையெனில், இவன் விரலிகுக்கில் பாடுகிற ’கொட்டுக்குப்’ பெயர் என்ன? இசைக் கருவியா, இழிவுக் கருவியா?
ஒரு கவிஞனின் ஆறாவது விரலிலிருந்து வழிவது கவிதையென்றால் ஒரு தச்சாசாரியின் ஐந்து விரல்களிலிருந்தும் வழிகிற நளினத்துக்குப் பெயர் என்ன கேள்விகளை முன் வைக்கின்றன.