அரசு சாரா அமைப்பு (NGO) என்பதே தவறாகச் சூட்டப்பட்ட பெயர் ஆகும்.அரசு சாரா அமைப்புகள் அனைத்திற்கும் ஏகாதிபத்திய அமைப்புகள்,ஏகாதிபத்திய அரசாங்கங்கள் மற்றும் தரகு ஆட்சியினரால் நிதி உதவி அளிக்கப்படுகிறது.அரசு சாரா அமைப்புகள் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் ஒரு தொடர்புப் பாலமாகச் செயல்படுகின்றன.சுரண்டல்வாதிகள் சிவில் சமூகத்தின் கருத்துகளில் தாங்கள் விரும்பும் தாக்கங்களை ஏற்படுத்த இவற்றை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர்.அவர்கள் ஏகாதிபத்தியக் கைகளினால்,அந்த ஏகாதிபத்தியத்தின் நீண்டகாலக் குரிக்கோளை அடைவதற்காக ஆட்டுவிக்கப்படுகின்றனர்.இவ்வாறாக வளர்ச்சித்திட்டம்,சமூக நீதி,மனித உரிமை,அடிமட்ட அளவிலான சனநாயகம் போன்ற பெயர்களில் அரசு சாரா அமைப்புகளின் கருவூலத்திற்குப் பெரும் நிதி வழங்கப்படுகிது.கடந்த புத்தாண்குகளில் உலக வங்கி மற்றும் பிற ஐ.நா.அமைப்புகள்,தமது நிதி யாவும் அரசு சாரா அமைப்புகள் மூலம் பயன்படுத்தப்படவேண்டும் என வற்புறுத்தி வருகின்றன..