ஏராளமான வாய்ப்புகளும்,அதே நேரம் கடுமையான போட்டிகளும் நிறைந்திருக்கும் உலகத்தில் வெற்றிபெற, ‘வேண்டிய அளவு நேரம்’ என்பது எவருக்குமே கிடைக்காது.பலரும் முன்வைக்கிற பொதுவான காரணம், ‘நேரம் போதவில்லை’ என்பதுதான்.
35 புத்தகங்களை எழுதியிருக்கும் சோம வள்ளியப்பன் எழுதியுள்ள இரண்டாவது ‘டைம் மேனேஜ்மெண்ட்’ புத்தகம் இது.காலம் உங்கள் காலடியில் என்ற முதல் புத்தகத்தை போலவே,எவரும் சுலபமாக பயன்படுத்தக்கூடிய பல பிராக்டிகல் நேர நிர்வாக வழிமுறைகளை எளிமையாக விளக்குகிறது இந்த புத்தகம்.