உழைப்பு ,நேர்மை, எளிமை, தாய்ப்பாசம் என்பவை இந்தியாவின் சொத்துக்கள்.
இந்த சொத்துக்களின் சுரங்கம் இந்திய கிராமங்கள். இன்றைய நாம், கிராமங்களை
விட்டு, வாழ்க்கையை விட்டு மெல்ல... மெல்ல... அல்லது வேக வேகமாக
வெளியேறிக் கொண்டிருக்கிறோம். போகட்டும்.... அடுத்த தலைமுறையேனும்
நம்மை நிராகரிக்காமல் இருக்க வேண்டும் எனில் இத்தகைய பதிவுகளை
நாம் ஆதரிக்க வேண்டும்.