அவசரமான உலகில் மக்களில் பலர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பது நன்கு புலனாகிறது.இத்தகைய சூழலில் நமது மக்களுக்குத் தேவை என்ன?மக்களுக்கு மன அழுத்தம் தரும் செய்திகளையும்,டென்சனைக் குறைக்கும் பயிற்சிகளையும் உடனடியாகக் கொண்டு செல்ல வேண்டும்.இந்த எண்ணம்தான் “டென்சனை வெல்வது எப்படி?” என்ற புத்தகமாகும்.
நமது உடலில் ஏற்படுகின்ற பிரச்சனைகளில் 910 சதவீதம் மனவியல் தொடர்பாகக் காரணங்களைக் கொண்டிருக்கின்றன.டென்சந்மன உபாதைகளில் முக்கியமானது.மனம் பாதிக்கப்பட்டால் உடல் நலமும் பாதிக்கப்படுகிறது.மனமும்,உடலும்,நன்றாக உள்ளவருக்குத்தான்,வாழ்க்கை அமைதியாகௌம்,மகிழ்ச்சியாகவும் அமையும்.மன அழுத்தத்திற்கான காரணங்கள்,விளைவுகள்,அணுகுமுறைகள், தீர்வுகள் பற்றி அனைவரும் அறிந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.