பண்பாடு குறித்த கட்டுரைகள்,சமகாலத்தின் பதிவுகளாக விளங்குகின்றன.குறிப்பாகத் தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்கள் பற்றிய கட்டுரையானது,நடப்புத் தமிழர் வாழ்க்கையை முன்னிறுத்திய காத்திரமான பதிவு.அந்தக் கட்டுரையை மூலமாகக்கொண்டு,தொடர்ந்து ஆய்வை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.தமிழரின் பண்பாட்டு உருவாக்கத்தில் அழுத்தமான வினையாற்றுகின்ற விஷயங்கள் குறித்துக் கண்டறிவது அடிப்படையானதாகும்.எல்லாவிதமான அடையாளங்களும் அழிக்கப்படுகிற உலகமயமாக்கல் காலகட்டத்தில்,தமிழ் அடையாளத்தைத் தக்க வைக்க வேண்டியதன் நுண்ணரசியலை விவரிக்கின்ற கட்டுரைகளின் அரசியல்,நுட்பமானது.