தமிழில் ஆய்வு என்றால்,பழம் இலக்கியங்களைப் புதிய கண்ணோட்டத்தோடு பார்க்கவேண்டும் என்ற நோக்கில் அல்லாமல் கணித-அறிவியல் அடிப்படையிலும் மொழியை அணுகலாம் என சு.சீனிவாசன் முனைந்திருக்கிறார்.தமிழ்மொழியின் கட்டமைப்பை எழுத்து,வரிவடிவம்,ஒலி,சொல்,சொற்றொடர்,செய்யுள்-யாப்பு,உரை-பேச்சு ஆகிய பண்புகளின் அடிப்படையில் நுட்பமாக ஆராய்ந்துள்ள ஆய்வாளரின் முயற்சி பாரட்டுக்குரியது.