தமிழ் மொழி அரசியல்:
மொழி ஒரு சமூகத்தின் உற்பத்திப் பொருள். எனவே, சமூக அரசியல் நிலைகளில் அதன் தகுதி குறித்த பிரச்சனைகளுக்கு உள்ளாவது, பொருளாதார அடுக்குகளில் சாதிய, வட்டார வெறுபாடுகளைப் புலப்படுத்தி நிற்பது, கல்வி துறையில் உரியப் பங்கைப் போராடி பெறுவது, புலம்பெயர்ந்த நாடுகளில் இன அடயாளத்தைத் தக்கவைத்துக்கொள்ள மல்லாடுவது, மொழி அதிர்வை எதிர்கொள்வது என அனைத்தும் அரசியல் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை,. ‘காலச்சுவடு’, கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக தமிழகத்திளும் அயல்நாடுகளுமாகப் பல்வேறு தலங்களிலும் நிலவும் தமிழ்மொழி அரசியலை விவாதிக்க்க் களம் அமைத்துத் தந்துள்ளது. இத்தளத்தில் சமூக மொழியியற் புல அறிவு மிகுந்த சிந்தனையாளர்களால் எழுதி விவாதிக்கப்பட்ட 44 கட்டுரைகளின் தொகுப்பு இது.