தமிழ்க் கிறித்தவம்
தமிழ்நாட்டின் இலக்கிய மரபு. நாட்டார் இலக்கியம், நாட்டார் நிகழ்த்துக்கலை, நாட்டார் சமூகப் பழக்கவழக்கங்கள், இம்மண்சார்ந்த ஆவணங்கள் ஆகியனவற்றின் துணையுடன் தமிழ்க் கிறித்தவம் நிலைபெற்றுள்ளது என்பதை இந்நூல் அடையாளப்படுத்துகிறது.
தமிழ்நாட்டில் கிறித்தவம் பரவத் தொடங்கியபோது அது எதிர்கொண்ட சிக்கல்களையும் அவற்றிலிருந்து மீள அது எதிர்கொண்ட வழிமுறைகளையும் இந்நூல் அறிமுகம் செய்கிறது.
சாதியத்தையும் தீண்டாமையையும் தமிழக் கிறித்தவம் உள்வாங்கிய அவலத்தை எடுத்துரைக்கவும் இந்நூல் தவறவில்லை