மக்கள் மொழியில் எழுதுவது என்பதைவிட,மக்களின் வாழ்வை மொழியாக்கு என்பதுதான் பா.செயப்பிரகாசத்தின் கலை வேலைப்பாடு.அவரைக் கரிசல் படைப்பாளி என்று தனித்து வகைப்படுத்தினாலும்,பேசும் மொழியும் அதில் வெளிப்படும் தொனியும் வாழ்ந்த வாழ்வையும் சூழலையும் எல்லோருக்குமான மொழியாக்கிவிடுகிறது!இதெல்லாம் பா.செயப்பிரகாசம் போன்ற கலைப் படைப்பாளிகளுக்குத்தான் சாத்தியம்.