சுயமரியாதை இயக்கத்தின் பணிகளில் பெரும் பகுதி, பெண்கள் முன்னேற்றத்திற்காக என்பதால்முற்போக்கு
சிந்தனைகளால் விழிப்புற்ற பெண்கள், இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர். அக்காலத்தில் காங்கிரஸின்
முக்கிய நோக்கம் ஆங்கிலேய ஆட்சியை எதிர்ப்பதே ஒழியஆணாதிக்கத்தையோ, கடவுள், மதம், சாதி, சடங்குகள்
சார்ந்த பெண்ணடிமைக் கூறுகளை ஒழிப்பதோஅல்ல. இதற்காக எவ்வித நடவடிக்கைகளிலும் காங்கிரஸ்
ஈடுபடவில்லை. இது பற்றி சிந்திக்காமல்சுதந்திரப்போராட்டத்தில் ஆண்களுடன் பெண்களும் பங்கு பெறுவது மட்டுமே
பெண்விடுதலை என்றுகருதி வந்தனர். இந்த நிலையில் குழந்தை மணம் ஒழிப்பு, சுயமரியாதைத் திருமணம்,
கலப்புத்திருமணம், விதவை திருமணம், கர்ப்பத்தடை செய்தல், பெண்களுக்கும் சொத்துரிமை, பெண்கல்வி, தேவதாசி
முறை ஒழிப்பு, வரதட்சணை ஒழிப்பு என அனைத்து வகையான செயல்பாடுகளையும்சுயமரியாதை இயக்கம்
முன்னெடுத்தபோது, பெரும்பாலான பெண்கள் இதில் தங்களை இணைத்துக்கொண்டனர்.