பெண்கள் வெளி உருவாகாத இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்கிற நேர்க்கோட்டில் நின்று ஜாதி,மதம்,ஆணாதிக்கம் என்கிற தேசிய கருத்தாக்கங்களை அடித்து வீழ்த்திய பெண் போராளிகளின் எழுத்துக்களும் பேச்சுக்களும் அடங்கிய இரண்டாவது தொகுப்பு இது.
தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட,சிறுபான்மைச் சமூகம் என ஒடுக்கப்பட்ட பிரிவின் பெண்கள் பார்ப்பனியத்திற்கு எதிராக ஓர் அணியில் திரண்டதையும் உலகுத் தழுவிய பார்வைகளைக் கொண்டிருந்ததையும் சமகால பெண்ணிய செயல்பாட்டாளர்களுக்கும்,சமூக விடுதலை இயக்கங்களுக்கும் செயலூக்க நம்பிக்கையை அளிக்கும் விதமாக தமிழ்ச் சமூகத்தின் முன் இந்நூலை வைக்கிறோம்.