சுந்தரகாண்டத்தின் மந்திரசக்தி அளவற்றது. இதனைப் படித்தால், ஏழ்மை விலகும். உடல் நலம் மேம்படும். மனதுக்குகந்த வேலை அமையும். நல்ல வீடு வாய்க்கும். வாழ்க்கைச் சிக்கல்களில் இருந்து விடுபடலாம். பிரிந்தவர்கள் கூடுவர். ஆபத்துகளில் இருந்து மீளலாம். விரும்பிய செயல்கள் நன்கு நடந்து முடியும். மூளைக் கோளாறுகள் நீங்கும். அறிந்தோ அறியாமலோ இறைவனுக்குச் செய்த தவறுகளால் பாதிப்புகள் உண்டாகாது.
தங்களது இல்லத்தில் சுபிட்சம் நிலவுவது போலவே, தங்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இல்லத்தில் சுபிட்சம் நிலவ சுந்தரகாண்டம் நூலை அன்பளிப்பாக வழங்குங்கள்.