ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒருவன் மற்றொருவருடைய மதத்தினை மதித்து நடக்க வேண்டும்.அப்படி மரியாதை காட்டுவதன் மூலம் ஒருவன் தன் மதத்தினையும் உயர்த்திக் கொண்டு மற்ற மதத்திற்கும் ஒருங்கே தொண்டு செய்பவனாகிறான்,அவ்வாறு இல்லையெனில் தனது மதத்தின் அந்தஸ்தை குறைத்து விடுவதுடன் மற்ற மதத்திற்கும் தீங்கு செய்தவனாகிறான்.ஒருவன் தன் மதத்தின் மேலுள்ள பக்தியினால் அதை உயர்த்திப் பிடித்து பிறருடைய மதத்தை தாழ்வாக கருதினாலும்,நடத்தினாலும் தன்னுடைய மதத்திற்கே நஷ்டத்தை இழைத்து விடுகிறான்.ஆகையினால் இணக்கமான வாழ்வே பொருத்தமானது.
மௌரியச் சக்கரவர்த்தியான அசோகரின் பன்னிரண்டாம் பாறைச்சாசனம்,கி.மு.மூன்றாம் நூற்றாண்டு.