சொக்கப்பனை
கடங்கநேரியானின் கவிதைகள் நிலத்தால் ஆனவை, அதற்கு திசைகள் உண்டு. திசைகளெட்டும் பனை. “பனை” - கவிதைக்குள் நிலத்தின். பன்பாட்டின் குறியீடாகிறது... மொழியின் குறியீடாகவும் கூட.
தென் திசையில் தத்தளித்து நக்ரும் கடல் தாண்டியும் அக்குறியீட்டின் வாழ்வெல்லை நீள்கிறது. சமகால சகிப்பின்மையின் அரசியலை, வாழ்வாதாரங்களுக்கு நேர்கிற அபாயங்களை சூட்சுமற்ற மொழியில் நேரடியாக எதிர்த்து ஒலிக்கிறது இவரது குரல்.