தலைப்பைக் கண்டு திகைக்க வேண்டாம்
புரியும்படியாக எதையும் எழுதிவிடக்கூடாது என்ற எனது வைராக்கியத்தை ஒட்டி, இந்த்த் தலைப்பைக் கொடுக்கிறேன்.
ஒரு சாதாரணமான மனிதனின் அசாதாரணமான அனுபவங்கள்’ என்பதைத் குறிப்பதுதான் ஒசாம அசா’ என்ற தலைப்பு.
இது என்னுடைய சுய சரிதைஎன்று யாரும் பயப்பட வேண்டாம்.
இது என்னுடைய சுய சரிதை அல்ல.
ஏனென்றால் என்னைப்ப்ற்றி எந்த அளவுக்குக் குறைவாக மற்றவர்களுக்குத் தெரிகிறதோ அந்த அளவுக்கு எனக்கு நல்லது.
ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண அனுபவங்கள் என்று வேண்டுமானால் இந்த்த் தொடரை வைத்து கொள்ளலாம்.