அன்புள்ள மிம்மி,
ான் என் வீட்டுப்பாடங்களைச் செய்வதற்காக மனதை ஒருமுகப்படுத்த முயற்சிக்கிறேன்.ஆனால் முடியவில்லை.நகரில் ஏதோ நடக்கிறது.குன்றுகளிலிருந்து துப்பாக்கி வெடிச் சப்தத்தைக் கேட்க முடியும்.சாரைசாரையாய் மக்கள் டோரின்ஜாவிலிருந்து வெளியேறுகிறார்கள்.எதைத் தடுத்து நிறுத்துவது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.ஏதோ ஒன்று,மிக மோசமான ஒன்று வந்து கொண்டிருப்பதாகச் சுலபமாக உணர முடியும்.