சிறுதுளி பெரும்பணம்
வசதிகளுக்காக மட்டுமல்ல. உயர்ந்துகொண்டே போகும் விலைவாசியில் வேண்டியதைச் சாப்பிடவும் குறைந்தபட்ச வசதிகளுடன் தொந்திரவின்றி தங்கவும், உடல்நலத்திற்குத் தேவையான மருத்துவ செலவுகளைசெய்துகொள்ளவுமே கணிசமான பணம் வேண்டும் என்பதுதான் மாறிவரும் நிலை.
ஒன்று, ஏற்கன் பணக்கார்ராக இருக்கவேண்டும். அல்லது முயன்று பணக்கார்ராகிவிட வேண்டும். மாறிவிட்ட சூழ்நிலையில், வேறுவழியில்லை.
அப்படி முயன்று தன் எதிர்காலத்தை பாதுக்காத்துக்கொள்ள விரும்புகிறவர்களுக்கும், வசதியான நிலைக்கு வர விரும்புகிறவர்களுக்கும் மன புத்தகம் இது.
வருகிற வருமானத்தை வைத்துக்கொண்டேஓரளவுக்கு பணக்காரர் ஆவது அப்படி ஒன்றும் சிரமமல்ல என்பதையும் அதற்கான வழிகள் பலவற்றையும், தக்க உதாரணங்களுடன் விரிவாகச்சொல்கிறது சிறுதுளி பெரும்பணம்.
அள்ள அள்ள பணம் (5 பாகங்கள் ). ஷேர் மார்க்கெட் சீக்ரெட்ஸ், தொட்ட்தெல்லாம் பொன்னாகும், நாட்டுக்கணக்கு, பணமே ஓடிவா, சொர்க்கத்தின் சொந்தக்காரர் போன்ற பணம் தொடர்பான பல வெற்றிப்புத்தகங்களின் ஆசிரியரான சோம வள்ளியப்பன் அவர்களின் மற்றுமொரு நேர்த்தியான படைப்பு சிறுதுளி பெரும்பணம்.