கடின உழைப்பில் உருவான இந்த நூல் பொதுவாசகனுக்காக எழுதப்பட்டது என்பது முக்கியமானது.மார்க்சீயப் பார்வை கொண்ட செந்தீயின் அழகியல் உணர்வு கோவில்களையோ சிற்பங்களையோ பார்க்க எப்போதும் தடையாக இருக்கவில்லை.இதனால் சிற்பங்களின் பின்னணியில் உள்ள புராணங்களையும் தொன்மங்களையும் வெறுப்பின்றிப் பார்த்திருக்கிறார்,படித்திருக்கிறார்.
செந்தீ சமணசமயம் குறித்த நல்ல புரிதல் உள்ளவர்.அம்மதத்தின் சிற்பங்கள் பற்றிய அறிவு உள்ளவர்.இந்த படிப்பும் அனுபவமும்தான் இந்த நூலை இவ்வளவு தெளிவாக,நுட்பமாக எழுதக் காரணம் எனலாம் இன்றைய இளம் தலைமுறைகளிடம்.