சந்து வெளி நாகரிகம் :
தொண்ணூறுகளின் மிகத் தொடக்கத்தில் எழுத வந்த பா.ராகவன், பிறவி சென்னைவாசி. இதுவரை ஏழு நாவல்கள், நான்கு சிறுகதைத் தொகுப்புகள், பதினான்கு கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் பதினைந்து அரசியல் – வரலாற்று நூல்களின் ஆசிரியர்.
இவரது டாலர் தேசம், நிலமெல்லாம் ரத்தம், மாயவலை போன்ற அபுனை – அரசியல் நூல்கள் மிகவும் புகழ் பெற்றவை. தமிழ் வெகுஜன தளத்தில், அரசியல் வரலாற்று நூல்களுக்கான நிரந்திர இடத்தை உருவாக்கியவை.
சுமார் இருபதாண்டு காலம் பத்திர்கை மற்றும் பதிப்புத் துறையில் பணியாற்றிய பா.ராகவன், தற்சமயம் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கு எழுதி வருகிறார்.
தமது படைப்பிலக்கியப் பங்களிப்புகளுக்காக பெருமைக்குரிய பாரதிய பாஷா பரிஷத் விருது பெற்றவர். இவரது சில படைப்புகள் ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் மொழியாக்கம் கண்டுள்ளன.