என்னை ஈன்ற தாய் தந்தை அவர்களுக்கும் என்னைவளர்க்கும் எனதருமை மனைவிக்கும் எனக்குப் பெருமை சேர்க்கும் என்
மகள்கள் இருவருக்கும் இந்தப் படைப்பினைச் சமர்ப்பிக்கிறேன். மலையடிவாரத்தில்தான் அதிகம் குவிந்திருக்கிறார்கள். உச்சி எப்போதும் காலியாகத்தான் இருக்கிறது.
தற்போது இருக்கும் நிலையில் அப்படியே நீடிப்பதற்கு நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. பழக்கப்பட்ட, பாதுகாப்பான இடம், ஆனால், உச்சியைத் தொட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் , வழுக்கும் பாறைகளையும் இடறிவிடும் கற்களையும் கடந்து முன்னேற வேண்டும்.
தடைகள் வெளியே மாத்திரமல்ல, உள்ளேயும் இருக்கின்றன. என்னால் முடியுமா என்னும் சந்தேகம். விழந்துவிட்டால் என்ன செய்வது என்னும் பயம். குறுக்குவழி ஏதேனும் கிடைக்காதா என்னும் குழப்பம். அனைத்தையும் முறியடித்தால்தான், அனைத்தையும் கடந்து சென்றால் தான் வெற்றி நிரந்தரம். உங்களை வெற்றியாளராக மாற்றுவதற்கு மகத்தான சில உத்திகளைக் கற்றுத்தருகிறது இந்த நூல்.