சில்லறை வர்த்தகம் பல்நோக்குப் பார்வை :
அரிசி, பருப்பு போன்றவற்றை குவிண்டால் (100 கிலோ) கணக்கில் விற்றால் மொத்த வியாபாரம். அதையே, கிலோ கணக்கில் விற்றால் சில்லறை வியாபாரம். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், மொத்த வியாபாரம் என்பது சிறு வியாபாரகளுக்கானது. சில்லறை வர்த்தகம் என்பது நுகர்வோர்களுக்கானது / நேரடி பயனீட்டாளர்களுக்கானது.
நமக்கெல்லாம் நன்கு பரிச்சயமான அண்ணாச்சி மளிகைக் கடை சில்லறை வியாபாரத்தில் ஒர் அங்கமே. அதன் பரிணாம வளர்ச்சிதான் இன்று கொடிகட்டிப் பறக்கும் சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் போன்றவை. எந்த ஒரு வியாபாரமாக இருந்தாலும், அது உற்பத்தியாளருக்கும் விற்பனையாளருக்கும், அதைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கும் உபயோகமாகவும், லாபம் தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில், சில்லறை வர்த்தகத்தின் சிறப்பான வழிமுறைகளிலும் வளர்ச்சியிலும் மூன்று தரப்புக்கும் சமமான அளவில் பொறுப்பு இருக்கிறது.
இந்தப் புத்தகத்தில் சில்லறை வர்த்தகம் என்றால் என்ன, சில்லறை வர்த்தகத்தில் இருக்கும் நெளிவு சுளிவுகள், கஷ்ட நஷ்டங்கள் என்னென்ன, நீங்கள் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடுவதாக இருந்தால் என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் எளிமையாகச் சொல்லப்பட்டு உள்ளன.