‘தமிழ் நூற்பதிப்பு வரலாறு’ எழுதியலில் பதிப்பாசிரியர் சி.வை.தாமோதரனார்க்குரிய இடம் சரியாக மதிப்பிடப்பெறவில்லை எனும் கருதுகோளை முன்வைத்து மேற்கொள்ளப் பெற்ற ஆய்வே இந்நூல்.
சி.வை.தா.வின் பதிப்புப் பணிகளை மதிப்பிட்டு ஆய்வாளர்களால் எழுதப்பெற்ற ஆய்வுரைகளுக்கும் சி.வை.தா.வின் பதிப்புப் பணிகளுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைப்பதே இந்நுலின் முதன்மை நோக்கமாகும்.
கேட்பாரற்றுக் கிடந்த செவ்விலக்கியங்களைக் கறையான் வாயிலிருந்து மீட்டெடுத்த சி.வை.தா.வுக்குத் தமிழகம் செய்த அடையாளம் என்ன?இனிச் செய்யவேண்டியவை என்னென்னெ?எனும் கருத்துரு இந்நூலில் முன்வைக்கப் பெற்றுள்ளது.