சங்க நூல்களை மட்டும் படித்து சேரர் வரலாற்றை எழுதுவது சிறப்பன்று.சேர நாடு முழுவதும் இலக்கிய அறிவோடு சுற்றி, வரலாற்று உணர்வோடு பண்டை இடங்களை கண்டறிந்து வரலாறு எழுதுவதே சிறப்புடையது.இச்சீரிய முறையில் பேராசிரியர் சு.துரைசாமிப்பிள்ளையவர்கள்.சேர நாடு முழுமையும் சுற்றித் தொண்டி,வஞ்சி முதலிய வரலாற்று புகழ் படைத்த இடங்களை கண்டரிந்தும்;மலைகள்,ஆறுகள் முதலியவற்றின் பண்டையப் பெயர்கள் இன்னவை,இக்காலப் பெயர்கள் பெயர்கள் இன்னவை என்பவற்றை ஆராய்ந்து அறிந்தும் இந்நூல் எழுதியிருத்தல் மிகவும் போற்றத்தக்க செயலாகும்.
-மா.ராசமாணிக்கனார்