சிகரங்கள் காலியாகத்தான் இருக்கின்றன. மலையடிவாரங்களில்தான் போட்டிகளும் போராட்டங்களும், சிக்கல்களும் அதிகம்.
ஏன்? உச்சம் அபூர்வமானவர்களுக்கு மட்டுமே. அனைவருக்குமானதல்ல. முள் கிரீடத்தை அணிய தயாராக இருப்பவர்களுக்கு மாத்திரமே சிம்மாசனம் அருளப்படுகிறது. அதிகபட்ச உழைப்பை, அசாத்தியமான திறமைகளை உங்களிடம் இருந்து தலைமைப்பதவி எதிர்பார்க்கிறது.
சவாலைச் சந்திக்க நீங்கள் தயார் என்றால் சில கேள்விகளுக்கு உங்களுக்கு விடை தெரிந்திருக்கவேண்டும். ஒரு தலைவனின் அடிப்படைத் தகுதிகள், பண்புகள் என்னென்ன? இக்கட்டான சூழலில் ஒரு தலைவன் எப்படிச் செயல்படவேண்டும்? அதிகாரத்தை இறுதிவரை தக்கவைத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்யவேண்டும்? அல்லது என்னவெல்லாம் செய்யக்கூடாது?
ஒரு தலைவனுக்குரிய அத்தனை தகுதி-களையும் அழகான உதாரணங்களோடு விளக்குகிறார் நூலாசிரியர் கோபிநாத்.