சாதேவி
ஒட்டுமொத்தக் குடும்பமும் விழுந்து வணங்கியது. அம்மா விடாமல், ’ஸ்வாமி காப்பாத்துங்க’ என்று சொல்லிக் கொண்டே இருந்தாள். பெண்கள் அனைவரையும் அம்மாவின் கண்ணில் படாதவாறு செல்லச் சொன்னார் ஆச்சார். அண்ணா இனி நடக்கப்போகும் கொடுமையைப் பார்க்க முடியாது என்று சொல்லிக் குளிக்கப் போய்விட்டார். அம்மாவின் உடன் பிறந்தவர்கள் ஓலமிட்டுக்கொண்டே பிறந்த வீட்டுப் புடைவையைச் சார்த்திவிட்டுப் போனார்கள். அம்மாவுடன் இருந்த தூரத்து அத்தை சாகேசி தான் கமுகம் செய்தாள். அம்மாவின் தாலியை அறுக்கவே முடியவில்லை. அம்மா அழுதுகொண்டே, ‘இது கட்டியா இருக்கு, அவர் இல்லையே’ என்று சொன்னாள். அந்தக் காட்சியை யாரும் பார்த்து விடக்கூடாது என்று புடைவையை விரித்துப் பிடித் திருந்த நான் கதறினேன். எல்லாவற்றின் மீதும் வெறுப்பாக இருந்தது. ஆச்சார், ‘அதை அறுக்கெல்லாம் வேண்டாம். கழட்டி வெச்சிடுங்க. ரொம்பப் படுத்தவேண்டாம். வளையலையும் உடைக்கவேண்டாம். கழட்டி வெச்சா போதும்’ என்றார். அம்மா ஆச்சாரிடம் ‘சாதேவி ஆகணும்’ என்றார்.