எம்.ஏ.நுஃமானின் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.சமூக யதார்தத்துக்கும் இலக்கியப் புனைவுக்கும் இடையிலான உற்வு இக்கட்டுரைகளில் அலசப்படுகின்றன.
புதுமைப்பித்தன்,மௌனி,ந.பிச்சமூர்த்தி,கலைவாணன்,க.நா.சு.,கி.ராஜநாராயணன்,தி.ஜானகிராமன்,சுந்தர ராமசாமி,ஜெயகாந்தன்,வெங்கட் சாமிநாதன்,அம்பை,நீல.பத்மநாபன்,தோப்பில் முஹம்மது மீரான் முதலிய தமிழக எழுத்தாளர்கள் பற்றியும்,தாகூர் பற்றியும் சமகால எழுத்துப் படைப்பாளிகள் சிலர் பற்றியும் நுஃமானின் கூரிய விமர்சனப் பார்வை இக்கட்டுரைகளில் பதிவாகியுள்ளது.
வலுவான கோட்பாட்டு ஆடிப்படையில் நடுநிலையான கருத்துகளை முன்வைக்க முயலும் இந்நூல் தமிழ் விமர்சன உலகில் முக்கியமான வரவாகும்.