சக்தி பிறக்கும் கல்வி
கல்வியாளர் வசந்தி தேவி பல்வேறு சந்தர்ப்பங்களில் இதழ்களில் எழுதிய கட்டுரைகளும் மேடைப் பேச்சுகளும் நூலாக்கம் பெற்றுள்ளன. பொதுப்பள்ளி முறை பலவீனமடைந்து தனியார் பள்ளிகளாலும் சிறப்புப் பள்ளிகளாலும் கல்வி வணிகமாகி மாணவர்களைப் பாகுபடுத்தும் வர்க்கக் கருவியாக மாறியுள்ளதையும் மாணவர்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள், உடலுழைப்பை நிராகரிக்கும் பாடத்திட்டம், கட்டாய இலவசக் கல்வி, மத்திய, மாநில அரசுகளின் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டின் போதாமை போன்ற பலவற்றையும் இக்கட்டுரைகளில் அலசுகிறார். ஆதாரபூர்வமான தரவுகள் இவர் கருத்தாடலின் பலம். கொள்கை வகுப்போர், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என எல்லாத் தரப்பினரிடையிலும் இக் கட்டுரைகள் ஆரோக்கியமான விவாதங்களைத் தூண்டும்.