“...என் கல்லறையின் மேல்ல் இரண்டு சொற்கள் மட்டுமே பொறியுங்கள். ‘க்வீ க்வீ’ இப்படித்தான் ‘இரன்’ பறவை கூப்பிடுகிறது.நான் இதை அப்படிச் சரியாக உச்சரிப்பேன்.ஏனெனில் நான் உச்சரித்ததுமிரன் பறவைகள் கூட்டமாக என்னைச் சுற்றிச் சிறகடித்து வரும்.இது தெளிவான,அருமையான சத்தம்,உறை பனிக்காற்றில் எஃகு ஊசியைச் செலுத்தினாலும் வர்ரும் ஒலி போலிருக்கும்.இப்போது சில நாள்களாகவே சின்னஞ்சிறிய ‘வார்பில்’ பறவை ஒன்று அங்கு இருப்பதும் மென்மையான குரலொலியும் உங்களுக்குத் தெரியுமா?